வேலைக்கு போகும் பெண்களுக்கான பேஸ் பேக்

வேலைக்கு போகும் பெண்களுக்கான பேஸ் பேக்:-

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.

எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க உங்களுக்காகவே பிரத்யேக குளியல் பவுடர் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு போகும் பெண்களுக்கான பேஸ் பேக் – எலுமிச்சை பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:-

எலுமிச்சை தோல்-50 கிராம்

கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்

கசகசா- 50 கிராம்

பயத்தம் பருப்பு- கால் கிலோ

கடலை மாவு- 6 டீஸ்பூன்

முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்

எலுமிச்சை பேஸ் பேக் செய்முறை:-

முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை மெஷினில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு கடலை மாவு, முல்தானி மட்டி மற்றும் எலுமிச்சை சாற்றை இதனுடன் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்’கை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.

ரோஜா பேஸ் பேக்:-

ரோஜா இதழ்களை சூடு தண்ணீரில் போட்டு 30 நிமிடம் வைக்கவும். பின்னர் ரோஜா இதழ்களை பிழிந்து தண்ணீரை தனியாக எடுக்கவும்.

முகத்தை நன்றாக கழுவி விட்டு அரைத்த ஓட்சுடன் ரோஜா தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து முகம், கழுத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து கொள்ளவும். அதில் கடலை மாவு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை முகத்தில் போட்டு நன்றாக காய விடவும். காய்ந்ததும் பால் அல்லது தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

ரோஜா இதழ்களை நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதில் தயிர், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகம், கழுத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

இந்த பேஸ் பேக் ஆயில் மற்றும் வறண்ட சருமத்தில் சிறந்தது.

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், அதற்கு இந்த ஃபேஸ் பேக் நல்ல பலனைத் தரும்.

அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும்.

கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

உடலில் அதிகமாக சூடு இருந்தால், அதனை சரிசெய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள தயிர் வெப்பத்தை தணித்துவிடும்.

அதிலும் கடலை மாவுடன் கலந்து ஃபேஸ் பேக் செய்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆகவே தயிரை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி, ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

இந்த பேஸ் பேக் பற்றிய குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா ?

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments