வைட்டமின்-டி யை எப்படிப் பெறுவது?

வைட்டமின்-டி யை எப்படிப் பெறுவது?

நம்முடைய நாடு உஷ்ணமான வானிலை கொண்ட நாடு. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வெயில் இருக்கிறது. அப்படியும் ‘வைட்டமின் குறைபாடு’ அதிகரித்திருப்பது வருத்தமான விஷயம்.

இதற்க்குக் காரணம் கடந்த இருபது ஆண்டுகளாக நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியதே.

குறிப்பாக ஐ.டி. என்னும் தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் அலுவலகம் சென்று விட்டு, சூரியன் மறைந்த பிறகே அலுவலகம் விட்டு வெளியில் வருகின்றனர். சூரிய வெளிச்சம் என்பதே அவர்கள் மீது படுவதில்லை.

அடுத்தது பள்ளி செல்லும் குழந்தைகளின் நேரம் மாறி விட்டது. காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, மாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு பள்ளியை விட்டு வெளியே வருகின்றனர்.

சூரிய வெளிச்சம் என்பதே பள்ளியில் படிக்கும் குழைந்தைகள் மீது படுவதே இல்லை. விளையாட்டு வகுப்புகள் பெரும்பாலும் கிடையாது.

பல பள்ளிகள் இருக்கும் இடங்களில் மைதானங்களே கிடையாது. முற்றிலும் ஏர் கண்டிசன் வசதிகள் செய்யப்பட்ட பள்ளிகளும் அதிகரித்து வருகின்றன.

வீடுகள் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாறி, ஜன்னல்களைக் கூட நாம் இப்போது திறப்பதில்லை.

இப்படி இருக்கும் சூழ் நிலையில் சூரிய ஒளி எங்கிருந்து நம் உடலின் மீது அல்லது தோலின் மீது படும்?

வைட்டமின்-டி யை எப்படிப் பெறுவது:-

காலை 10 மணி முதல், மாலை 3.00 மணி வரை, நம் உடலின் மீது அல்லது தோலின் மீது படும், அன்றாடம் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்-டியை நம் உடல் உற்பத்தி செய்து கொள்கிறது.

இந்த குறிப்பிட்ட நேரத்தில், வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை சூரிய ஒளி நம் உடலின் மீது அல்லது தோலின் மீது படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் விட்டமின் டீ குறைவுப் பிரச்சினை வராது.

உடலுக்குத் தேவையான வைட்டமின்டி சத்தை உணவு மூலமாக பெற முடியுமா என்றால், மிகக் குறைந்த அளவே சாத்தியம்.

வைட்டமின்-டி யை எப்படிப் பெறுவது?

அதிலும் பால், முட்டை, மீன் இவற்றில் மட்டுமே உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகள் மேலும் வெயில் படுவதில்லை.

நாட்டுக்கோழி முட்டையில் வைட்டமின்டி சத்து உள்ளது. ஆனால் தற்போது நாட்டுக்கோழியே கிடையாது. சாமன் உட்பட சிலவகை மீன்களில் மட்டுமே வைட்டமின்டி உண்டு.

காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்பவர்களும், சன் ஸ்க்ரீன் உட்பட பல லோஷன்களைத் தடவிக் கொள்கின்றனர்.

இது நேரடியாக சூரிய ஒளி, நம் தோல் மீது படும்போது, உற்பத்தியாகும் வைட்டமின்-டி மட்டுமே ஆரோக்கியமானது.

வைட்டமின்-டி யை எப்படிப் பெறுவது?

அப்படி இல்லாத படசத்தில், மேலை நாடுகளைப் போல, உணவுப் பொருட்களில், வைட்டமின்-டி சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

உங்கள் குழந்தைகள் வெளியில் போய் விளையாடும் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால், வெளிச்சம் உடல் மீது படும்படியாக விளையாடுகின்றனரா என்று கவனித்து வரவேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Comments

comments