பிரான்ஸில் வாகனத் தாக்குதல் – 80 பேர் பலி!

15/07/2016 – France Terror Attack:

ஃபிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில், மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் 80 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

ஃபிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் ஃபிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நீஸ் நகரத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சாலையோரமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அந்த வாகனம் சென்றது.

How many People Died in France Terror Attack:

இந்த விபத்தில், ஏராளமான மக்கள் சிக்கி நசுங்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த விபத்தில், சுமார் 80 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த கனரக வாகனத்தில் ஆயுதங்கள், கையெறி குண்டுகள் இருந்ததாக நீஸ் நகர தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதலா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஏராளமான சடலங்கள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள இந்த சம்பவத்திற்கு ஃபிரான்ஸ் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்: தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐஎஸ் தீவிரவாத இயக்கம், அவசர நிலை பிரகடனம் நீட்டிப்பு – Isis takes Responsibility for France Terror Attack:

நீஸ்: பிரான்ஸில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது வெடிபொருட்கள் நிரப்பிய லாரியை மக்கள் கூட்டத்தில் மோத செய்ததில் 80 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின் போது வெடிபொருட்கள் அடங்கிய லாரியை தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டவாறு வேக ஓட்டிவந்து பெறும் விபத்தை ஏற்படுத்தியுள்ளான். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதைதொடர்ந்து பிரான்ஸில் அவசர நிலை 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஃப்ரான்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.

கனரக வாகனத்தை தீவிரவாதி வேகமாக ஓட்டிச்சென்றதால் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். லாரி வெடிக்கச் செய்து தப்ப முயன்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். சம்பவம் நடைபெற்ற பகுதியில் தீவிரவாத தடுப்பு பிரிவினரும், கூடுமல் போலீசாரும் விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே ஆலோசனைப்படி நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பாரீசிஸ் 130 பேரை பலி கொண்ட தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட 2வது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.

Comments

comments

Leave a Reply